Thursday, September 30, 2010

எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் 'முதல் தகவல் அறிக்கை






30.09.2010 இன்று






சூப்பர் ஸ்டார் ரஜினியை இதற்க்கு முன்பு இப்படியொரு பிரமாத கெட்டப்பில் பார்த்ததில்லை..
எக்ஸலெண்ட் நடிப்பு பிரமாதமான ஸ்டண்ட் ஜஸ் அழகு சொக்க வைக்கிறது இயல்பான காமெடி மிரள வைக்கும் இரண்டாம் பாகம்.. குடும்த்தோடு பார்க்க மிகச் சிறந்த பொழுதுபோக்குப் படம்.


எந்திரன் படம் குறித்து வந்திருக்கும் முதல் தகவல் அறிக்கை இது என்றால் மிகையல்ல துபாயில் இன்று காலை முதல் காட்சி 7.30 மணிக்கு திரையிடப்பட்டது இந்தக் காட்சிக்காக ஒரு மணிநேரம் முன்பாகவே காத்திருந்தனர் ரசிகர்கள் அவர்களில் துபாயில் மார்க்கெட்டிங் அதிகாரியாகப் பணியற்றும் வருனும் ஒருவர்.

படம் பார்த்தையும் முடிந்தபிறகு ரசிகர்கள் மனநிலையையும் அவர் நம்மிடம் தொலைபேசி மூலம் இப்படிக் கூறினார்.
சான்ஸே இல்லை சார் படம்னா இதான் இதுக்கு மேல ஒரு ஹைடெக் கமர்ஷியல் படத்தை இனி இந்தியாவில் யாராலும் தர முடியுமா தெரியவில்லை ரஜினி ஷங்கர் காம்பினேஷன் அட்டகாசம் இரண்டே முக்கால் மணி நேரப் படம் எப்போது இடைவேளை. வந்தது என்றே தெரியவில்லை..
அதன் பிறகு ஒன்றரை மணி நேரப் போன வேகம் பிரமிக்க வைக்கிறது எந்திரனில் கிராபிக்ஸ் காட்சி எது என்று கண்டுபிடித்தால் ஒரு கோடி பரிசு என்று போட்டியே வைக்கலாம் அந்த அளவு மிரட்டல் அசத்தல் ஸ்டாவிஸ்டன் ஸ்டுடியோ மற்றும் ஸ்பெஷல் எபெக்ட்ஸ் செய்த ஹாலிவுட் நிறுவனத்தினர் கலக்கி இருக்கிறார்கள்.
குடும்பத்துடன் அச்சமின்றிப் பார்க்கலாம் என உத்தரவாதமே தரலாம் படம் அத்தனை டீஸண்டாக உள்ளது.

படத்தின் பாடல்களுக்காவே தனியாக இன்னொரு முறை பார்க்க வேண்டும் குறிப்பாக கிளிமாஞ்சாரே கலக்கல் என்றார் அவர்.

அமெரிக்கா பிரிட்டன் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளிலும் இன்றே எந்திரன் சிறப்பு காட்சிகள் நடக்கின்றன அந்த திரையரங்குகள் இப்போதே திருவிழாக் கோலம் பூண்டுள்ளதாக ரசிகர்கள் தொலைபேசி மூலம் தெரிவித்தனர்..

Saturday, July 31, 2010

ஜோக் ஹா ஹா


ஹலோ சன் மீசிக்கா ?

ஆமாம்,,, சொல்லூங்க,, உங்க பேரு?

என் பேரு கல்யான் மேடம் ...

சொல்லுங்க கல்யான்... எங்க இருந்து பேசுறிங்க...?

இராமநாதபுரம் கேனிக்கரையில் இருந்து பேசுறேன் மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க.....

நன்றி......

சொல்லுங்க கல்யான் தகவல் பகுதியில் என்ன சொல்ல போறீங்க?
அது வந்துங்க மேடம்....

இப்படி பேச தயங்கினா என்ன அர்த்தம்.? தைரியமா சொல்லுங்க.....

தாராளமா எதுவா இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது.. மன்சுல இருக்கும் விசயத்தை சொல்லிட்டு உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொன்னா நாங்க அதை ஒளிபரப்புவோம்... தயங்காம சொல்லுங்க கல்யான்.....

மேடம் நேத்து ஒரு பர்ஸ் பாரதி நகர்ல கிடைச்சுது மேடம்.. அதுல 15,000 ரூ பணம் இருந்துச்சி. அதுல கிரெடிட் கார்ட்.விசிட்டிங் கார்டு ஜடி கார்ட் எல்லாம் இருக்கு. அதுல இருக்கும் விலாசம்.

B.w.அஸ்கர்
வெளிப்பட்டிணம்
இராமநாதபுரம்

கல்யான் எவ்வளவு பெரிய ஆளுசார் நீங்க. அந்த பணத்தை மிஸ்டர் அஸ்கர்க்கு அனுப்ப போறிங்களா ?

இல்லைங்க மேடம்,,,,,

பர்ஸ் தொலைச்ச அஸ்கர்க்கு நான் சொல்ற பாட்டை டெடிகேட் பண்ணுங்க மேடம்..

என்ன பாட்டு..?

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..

பாட்டை போடுங்க மேடம்........

Sunday, July 25, 2010

கடலோர மாவட்டமான இராமநாதபுரம்

கடலோர மாவட்டமான இராமநாதபுரத்தில் பல விஞ்ஞானிகளும் தொலிலதிபர்களும், கட்டிட கலைஞர்களும் மீனவர்களும், ஒவியர்களும் விவசாயிகளும், நடிகர்களும் ஏன் இன்னும் பலப்பல சாதனையாளர்களை உருவாகும் இராமநாதபுரத்தில், முக்கியமா உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருந்து வரக்கூடிய இடம் அறியமாண் கடற்கரை, ஏர்வாடி தர்ஹா, தனுஷ்கோடி இராமேஸ்வரம் திருப்புலாணி நவக்கிரகங்கள் உள்ள தேவிபட்டிணம், உதரகேசமங்கை, திருவடானை, ராமர்பாதம் இப்படி பல இடங்கள் உள்ளன.

இராமநாதபுரத்தில் இயற்கையின் தாக்கம் அதிகமாக உள்ளது இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கங்களால் ஆயுட்காலம் மற்ற மாவட்டங்களை விட வித்தியாசப்படுகிறது 2006 ஜுலை மக்கள் தொகை கணக்கின் படி இந்தியாவில் 109.55 கோடி பேர் உள்ளனர். உலகின் மொத்த மக்கள் தொகையில் இது இரண்டாவது இடமாகும். மாவட்டத்தின் பிறப்பு விகிதம் 163 சதவீதமாகும். அதே நேரத்தில் இறப்பு விகிதம் 7 சதவீதமாக உள்ளது. சிசு மரண விகிதம் 25.3, மகப்பேறு தாய்மார்களின் இறப்பு விகிதம் 1.2 சதவீகிதமாக உள்ளது மக்கள் தொகை இப்படி பல லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய கடலோர மாவட்டமான 800 க்கும் மேற்பட்ட கிராமத்தினருக்கும் வரப்பிரசாதமாக உள்ளது. இராமநாதபுரம் அரசு மருத்துவமனை.......

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் ஒரு வாரத்தில் பல பேர் இறந்த நிலையில் பல பேர் மதுரைக்கு கொண்டு போகிறார்கள்..... இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அவலநிலை உள்ளது. இப்பகுதிகளில் பெரும்பாலும் ஆரம்ப சுகாதாரநிலையம் மட்டுமே அமைந்துள்ள நிலையில். இங்கு கிராமத்தினர் முதலுதவியை மட்டும் பெற்றுக் கொண்டு இராமநாதபுரம் மருத்துவமனையதான் அதிகம் நாடுகின்றனர். இங்கு மாவட்டத்திலே பிரம்மாண்டமாக, அதிக படுக்கை வசதி, நவின கருவி வசதிகளுடன் உள்ளது. ஆனால் இங்கோ டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது இப்பகுதி கிராமங்களுக்கு மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன் 11வது வார்டு இந்திரா நகரை செர்ந்த கருப்பையா மகன் கூத்தையா 19 என்ற இளவட்டம் விபத்துக்கு உள்ளானான் உடனே கூத்தையவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கூட்டி சென்றார்கள்.. மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர்கள், இங்கே மருத்துவர்கள் இல்லை உடனே மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார்கள்.. கூத்தையாவின் தாய் உடனே மதுரைக்கு போகும் வழியில் மானாமதுரை என்ற இடத்திள் கூத்தையா இறந்து விட்டான் இதர்க்கு காரனம் இராமநாதபுரத்திள் பொதிய டாக்டர்கள் இல்லை இருந்திருந்தாள் கூத்தையாவை காப்பாற்றி இருக்கலாம்.. கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர், இரு தினம் முன் பள்ளி மாணவி ஒருவர் பஸ்சில் விபத்திள் சிக்கி மருத்துவமனைக்கு கோண்டு செள்ளப்பட்டது. டாக்டர்கள் இல்லாததால் முதலுத்விக்கு கூட மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசர உதவி, தீ விபத்து சிகிச்சை, பிரசவம் உட்பட 24 பிரிவுகளும் 24 மணிநேரமும் சுறுசுறுப்பாக செயல்பட்ட நிலையில், மருத்துவமனை தற்சமயம் வெறிச்சொடி காணப்படுகிறது. பகலிலேயே இந்த நிலை என்றால் இரவு நேரப்பணி டாக்டர்களை பற்றி சொல்ல தெவையில்லை. பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாதது பெண்கள் மற்றும் ஏழை மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நொயாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்

Wednesday, March 17, 2010

கொத்தடிமை....

1) அடிமைக்கும், கொத்தடிமைக்கும் என்ன வித்தியாசம்?
ஒரு பெண்ணைக் காதலிக்கும் பொது நீங்க அடிமை....
அதுவே அந்த பெண்ணையே கல்யாணம் பண்ணிடீங்கன்னா நீங்க கொத்தடிமை....
2) நேரு சொன்னார்: சோம்பேறித்தனமே மிகப் பெரிய எதிரி.....
காந்தி சொன்னார்: உங்கள் எதிரிகளையும் நேசியுங்கள்....
இப்ப சொல்லுங்க... மாமா சொல்றத கேக்குறதா? இல்ல தாத்தா சொல்றத கேக்குறதா?
3) காதல் எங்கே பிறந்தது என்று தெரியுமா?......
சீனாவுல தான் பிறந்தது.....
ஏனெனில் Anything made in China is NO GURANTEE & NO WARRANTY.
4) ஒரு முறை நியூட்டன் அவருக்கு 17 வயதில் வகுப்பறையில் படித்துக்
கொண்டிருக்கும் போது ஒரு பாம்பு அவருடைய கால் விரலில் கடித்துவிட்டது.
அப்போதும் அவர் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து படித்துக்
கொண்டிருக்கிறார். ஆசிரியர் இது பற்றி கேட்கும்போது, " பாம்பு என்
காலில்தான் கடித்தது, என்னுடைய Mind 'ல் அல்ல" என்கிறார். இதைத்தான் நாம்
"வெட்டி ஸீன்" போடுவது என்கிறோம்....
5) நபர் - 1: ஹோடேலில் சாப்பிட்டுவிட்டுப் பார்க்கிறேன், கையில் காசு
இல்லை.....
நபர் - 2: அய்யய்யோ... அப்புறம் என்ன பண்ணுனீங்க ?..
நபர் - 1: அப்புறம் பாக்கெட்'ல இருந்து எடுத்துக் கொடுத்துட்டேன்....
6) மூன்று மொக்கைகள்: a) நைட்'ல கொசு கடிச்சா குட்நைட் வைக்கலாம்.. அதுவே
மார்னிங்'ல கடிச்சா குட் மார்னிங் வைக்க முடியுமா?
b) பேப்பர் போடுறவன் பேப்பர்காரன், பால் போடுறவன் பால்காரன், அப்பா
பிச்சை போடுறவன் பிச்சைக் காரனா?
c) எல்லா stage'லயும் டான்ஸ் ஆடலாம்.. ஆனா கோமா stage 'ல டான்ஸ் ஆட
முடியுமா?
7) ஒன்றுமே தெரியாத ஸ்டுடென்ட் கிட்ட கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க...
எல்லாம் தெரிஞ்ச வாத்தியார்கிட்ட ஆன்சர் பேப்பர் கொடுக்குறாங்க...
என்ன கொடும சார் இது?....
8) காதல் என்பது கரண்ட் போன நேரத்துல வர கொசு மாதிரி...
தூங்கவும் முடியாது... தூரத்தவும் முடியாது....
9) என்னதான் நீங்க செண்டிமெண்ட் பார்த்தாலும், கப்பல் கெளம்பறதுக்கு
முன்னாடி எலுமிச்சம் பலம் எல்லாம் வைக்க முடியாது... சங்கு ஊதிவிட்டுதான்
கெளம்பனும்...

10) மனைவி: ஏங்க... கொஞ்சம் வாங்க... குழந்த அழுவுது...
கணவன்: அடி செருப்பால! ... உன்னை எவண்டி மேக்-அப் இல்லாம குழந்தைப்
பக்கத்துல போக சொன்னது?
11) உங்ககிட்ட பிடித்ததே இந்த 5 தான்!
1. சிரிப்பு
2. அழகு
3. நல்ல டைப்
4. கொழந்த மனசு...
5. இதெல்லாம் பொய்'ன்னு தெரிஞ்சும் நம்புற நல்ல மனசுபாவம்....
12) அப்பா: ஏண்டா உஜாலா பாட்டில கீழ போட்டு தாண்டிகிட்டு இருக்குற?
மகன்: எங்க ஸ்கூல்'ல நாளைக்கு நீளம் தாண்டுற போட்டி இருக்கு. அதுக்கு
தான் பிராக்டீஸ் பண்ணி கிட்டு இருக்கேன்.
13) முதல் காதலில் ஜெய்த்தவனுக்கு அதுதான் கடைசி வெற்றி....
முதல் காதலில் தோற்றவனுக்கு அதுதான் கடைசி தோல்வி....
14) தத்துவம் 2010
"லாரி"ல கரும்பு ஏத்துனா "காசு"!
"கரும்பு"ல லாரிய ஏத்துனா "ஜூசு"!!

Thursday, March 4, 2010

பிரிவின் கணங்கள்.....தெற்கத்தி பையன் தூக்கம் அற்ற கண்கள்

பிரிவின் கணங்கள்.....

காற்றில் அறுந்த மேக
துண்டுகளை போல்
உனக்கும் எனக்குமான
உறவை உடைத்து
செல்கிறது காலம்.....


கோடை வெயிலில் தெறித்து
கிடக்கும் நெல் மணியை
கடத்தி செல்லும் ஊர் குருவியாய்
நம் நினைவை
கொத்தி செல்கிறது மனது..

பசி கொண்ட யானையாய்
கொன்று தின்கிறது
மௌனம்
நமக்கான மணி துளிகளை.....

இல்லாமல் இருக்கும்
கடவுளை போல்
நாம் வாழ்ந்த பக்கங்களை
மற்றும் ஓர் முறை
வாசித்து காட்டுகிறது காதல்.....

ஒற்றை கொம்பில் தொங்கி
நிற்கும் தேன் கூடாய்
பெருகும் கண்ணீரோடு
பரிதவித்து நிற்கிறேன் நான்.....

Wednesday, March 3, 2010

நித்தியானத்தவும் மறைக்கப்பட்ட மாணவர் கொலைகளும்

ஜனநாயகத்தின் நான்காவது தூணாக ஊடகங்களை குறிப்பிடுவர்... அரசு எப்போது எல்லாம் தவறு இழைக்கின்றதோ அப்போது எல்லாம் அதை தட்டிக் கேட்கும் தார்மீக கடமை இந்த ஊடகங்களுக்கு இருக்கின்றது. தமிழகத்தின் இன்றைய ஊடகங்கள் அவ்வாறு இருக்கின்றனவா என கேள்வி எழுப்பினால் மவுனமே நமக்கு பதிலாக கிடைக்கிறது.


அரசு தனது பதவியை தக்க வைத்து கொள்ள எப்போதும் பிரச்சனையின் வேரை பார்க்காமல் அதை எப்படி திசை திருப்புவது என்பதிலே தான் தன் கவனத்தை செலுத்துகிறது... சமீப காலத்தில் தமிழத்தில் சில முக்கியமான பிரச்சனைகள் கொழுந்து விட்டு எரிந்த போது அது சாமர்த்தியமாய் திசை திருப்பப்பட்டன. சோதித்து பார்க்க வேண்டும் என்றால் கடந்த ஓர் ஆண்டின் நாளிதழ்களை கொஞ்சம் புரட்டி பாருங்கள்...இரண்டு நாட்கள் முக்கியமாய் இருக்கும் செய்திகள் பின் காணாமல் போய் இருக்கும்.பெரும்பாலான தமிழக ஊடகங்கள் அப்பட்டமாய் அரசுக்கு துணை போவது தெரிய வரும்..

அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் கலவரம்:

அண்ணாமலை பல்கலை கழகத்தில் பொறியியல் படித்து வந்த ஜர்கண்டை சேர்ந்த கெளதம் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தார்... 'தாமதமாய் கொடுக்கப்பட்ட சிகிச்சையால் தான் அவர் உயிரிழந்தார்' என்று கூறி வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பாதுகாப்புக்கு வந்த போலீசார் காட்டுமிராண்டித் தனமாக தாக்கியதில் இது வரை பல மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிகின்றன.

பிரபல சாமியார் நித்தியானந்தாவின் லீலைகள்

தனது ஆன்மீக சொற்பொழிவின் மூலம் பெரும் புகழையும், பணத்தையும் சம்பாதித்தவர் சுவாமி நித்தியானந்தா. ஒரு நடிகையோடு நெருக்கமாக அவர் இருக்கும் வீடியோ காட்சிகளை திரும்ப திரும்ப ஒளிபரப்பியது ஆளும் கட்சியின் ஆதரவை பெற்ற தொலைக்காட்சி ஒன்று.


இரண்டு சம்பவங்களும் தமிழகத்தின் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவம் போல் தோன்றும், உண்மையும் அது தான்... ஆனால் வெகு லாகவமாக ஊடகங்களால் அடுத்தடுத்து கோர்க்கப்பட்டு ஒன்றை மற்றொன்று மறக்கடிக்கச் செய்து விட்டது என்பது தான் நாம் யாவரும் அறியாத நிஜம்.


சரி செய்தி 2 ல் இருந்து துவங்குவோம். சாமியார்கள் தான் இன்றைய தமிழகத்தின் சாபம்... ஆண்டவனின் அருளுரைகளை வழங்குகிறேன் பேர்வழி என மக்கள் மனங்களை கரைத்து இவர்கள் அடிக்கும் கூத்துகள் கொஞ்ச நஞ்சமல்ல... பிரேமானந்தா துவக்கி வைத்த பட்டியல் இன்று நித்தியானந்தா வரை நீள்கிறது...
இந்தியாவில் தமிழகத்தில் உருவான பகுத்தறிவு சிந்தனையாளர்களை போல் வேறு எங்கும் உருவானதும் இல்லை, உருவாக போவதும் இல்லை.. இருப்பினும் இங்கே தான் மதத்தின் பெயரால் போலிகளும், பித்தலாட்டக்காரர்களும் குவிந்து கிடக்கின்றனர்..அந்த குவியலில் ஒருவர் தான் நித்தியானந்தா..


சரி பொது வாழ்வில் வந்து, ஆன்மீக வேடமிட்டு இது போன்று தவறு செய்யும் சாமியார்களை என்ன செய்யலாம்??? வேறு வழியே இல்லை, அரபு நாடுகளை போல் நடு ரோட்டில் நிக்க வைத்து 'நறுக்'


சரி செய்தி 1க்கு வருவோம்.... விபத்துகளில் அடிபட்டவர்கள் மருத்துவர்களின் அலட்சியத்தால் சரிவர கவனிக்கப்படாமல் உயிரிழப்பு ஏற்படுவது தமிழகத்தில் தொடர்கதையாகவே இருக்கிறது. சக மாணவன் ஒருவன் தவறான சிகிட்சையாலோ இல்லையேல் சரியான சிகிச்சை கிடைக்காமலோ உயிர் இழக்க நேரிடும் போது மாணவர்களுக்கு ஏற்படும் துயரமும், பெரும்கோபமும் இயல்பானதே. உணர்ச்சி கொந்தளிப்பில் இருக்கும் மாணவர்களை சரியாக கையாள தெரியாத ஆளும் வர்க்கம் தனது அரசு ரவுடிகளை வைத்து அடித்து துரத்தியதில் பல மாணவர்கள் கொல்லப்பட்டனர்... இதை விட ஒரு அரசின் கையாலாகாத தன்மைக்கு வேறு என்ன உதாரணம் வேண்டும்.. ஜனநாயகம் நாம் வாழும் சமூகத்தில் எத்தனை வன்மையாக நசுக்கபடுகிறது என்பதை பாருங்கள்.


ஆறு இந்தியர்கள் தலிபான்களால் கொல்லப்பட்டார்கள் என்ற செய்தி கேட்ட உடனையே தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ சங்கர் மேனன் ஆப்கானுக்கு சென்று உள்ளார். சொந்த நாட்டுக்குள் ஒரு மாநிலத்தில் அதுவும் ஒரே பல்கலைகழகத்தில் பல வட இந்திய மாணவர்கள் அரசு ஊழியர்களால் அடித்து கொல்லப்பட்டிருகின்றனர். என்னவென்று கேட்க வேண்டிய மத்திய அரசோ மவுனம் சாதிக்கிறது...உலகுக்கு உண்மையை தெரிவிக்க வேண்டிய ஊடகங்கள்???


உண்மையாக நடந்த செய்திகளை வெளி கொண்டு வராமல் இருப்பது கூட பத்திரிகை தர்மத்திற்கு எதிரானதே.


ஒரு உண்மையை மறைக்கவே முன்பே தமக்கு கிடைத்த வீடியோ ஆதாரங்களை தற்போது வெளியிட்டு பரபரப்பை கிளப்பி இருக்கிறது தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சியும், ஒரு புலனாய்வு பத்திரிக்கையும்..


நடந்த இரு பிரச்சனைகளும் மிக முக்கியமானவை...நம்மை ஆளும் அரசும், ஊடகங்களும் உண்மையையை திரிக்க பார்க்கும் போது ஒரு தேசத்தின் நேர்மையான குடிமகனாய் நாம் சந்திக்கும் சவால்கள் என்ன??? இந்த சூழ்நிலையில் நம் கடமைகள் என்ன??? சிந்திப்போம் !!!

Sunday, February 14, 2010

வெல்கம் மக்களே!

அஸ்ஸலாமு அலைக்கும்!

எல்லாரும் கோரஸா கொலவச் சத்தம் போடுங்க... ஆங்.. அதேதான்.என் அருமை பாசக்காரபய மக்கா... மேட்டர் என்னான உங்க வாசிம்கான் இப்போ வலைப்பூ தொடங்கியாச்சு. எல்லா புகழும் இறைவனுக்கே! இனிமே என்ன அதிரிபுதிரி அட்டகாசம்தான். எனக்குப் பிடிச்சது, பிடிக்காதது, மனசை நிறைச்சது, கரைச்சதுனு வகைதொகை இல்லாம இங்கன எழுதப் போறேன். படிச்சுட்டு உங்க பின்னூட்டத்தை போடுங்க! குத்தம் குறை இருந்தாலும் தாராளமா எழுதுங்க. நல்லதோ கெட்டதோ உங்க பின்னூட்டங்களை எனக்கு தட்டுங்க. அது எனக்கு பூஸ்ட் குடிச்ச எஃபெக்ட் தரும். அப்புறம் முக்கியமான மேட்டரு...நல்ல பின்னூட்டத்துக்கு நல்ல சன்மானம் உண்டு மக்கா.. அப்புறம் என்ன.. என்னோட அடுத்த பதிவுக்காக உங்க வின்டோஸை ஓப்பன் பண்ணிக் காத்திருங்க.. வர்ற்ட்டா...

பின்குறிப்பு: ஃபோட்டோ சும்மானாச்சும் ஒரு எஃபெக்ட்டுக்காக. கூகுள் இமேஜுக்கு நன்றி!