Saturday, July 31, 2010

ஜோக் ஹா ஹா


ஹலோ சன் மீசிக்கா ?

ஆமாம்,,, சொல்லூங்க,, உங்க பேரு?

என் பேரு கல்யான் மேடம் ...

சொல்லுங்க கல்யான்... எங்க இருந்து பேசுறிங்க...?

இராமநாதபுரம் கேனிக்கரையில் இருந்து பேசுறேன் மேடம் நீங்க ரொம்ப அழகா இருக்கிங்க.....

நன்றி......

சொல்லுங்க கல்யான் தகவல் பகுதியில் என்ன சொல்ல போறீங்க?
அது வந்துங்க மேடம்....

இப்படி பேச தயங்கினா என்ன அர்த்தம்.? தைரியமா சொல்லுங்க.....

தாராளமா எதுவா இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது.. மன்சுல இருக்கும் விசயத்தை சொல்லிட்டு உங்களுக்கு பிடிச்ச பாட்டை சொன்னா நாங்க அதை ஒளிபரப்புவோம்... தயங்காம சொல்லுங்க கல்யான்.....

மேடம் நேத்து ஒரு பர்ஸ் பாரதி நகர்ல கிடைச்சுது மேடம்.. அதுல 15,000 ரூ பணம் இருந்துச்சி. அதுல கிரெடிட் கார்ட்.விசிட்டிங் கார்டு ஜடி கார்ட் எல்லாம் இருக்கு. அதுல இருக்கும் விலாசம்.

B.w.அஸ்கர்
வெளிப்பட்டிணம்
இராமநாதபுரம்

கல்யான் எவ்வளவு பெரிய ஆளுசார் நீங்க. அந்த பணத்தை மிஸ்டர் அஸ்கர்க்கு அனுப்ப போறிங்களா ?

இல்லைங்க மேடம்,,,,,

பர்ஸ் தொலைச்ச அஸ்கர்க்கு நான் சொல்ற பாட்டை டெடிகேட் பண்ணுங்க மேடம்..

என்ன பாட்டு..?

நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு..

பாட்டை போடுங்க மேடம்........

Sunday, July 25, 2010

கடலோர மாவட்டமான இராமநாதபுரம்

கடலோர மாவட்டமான இராமநாதபுரத்தில் பல விஞ்ஞானிகளும் தொலிலதிபர்களும், கட்டிட கலைஞர்களும் மீனவர்களும், ஒவியர்களும் விவசாயிகளும், நடிகர்களும் ஏன் இன்னும் பலப்பல சாதனையாளர்களை உருவாகும் இராமநாதபுரத்தில், முக்கியமா உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளிலும் இருந்து வரக்கூடிய இடம் அறியமாண் கடற்கரை, ஏர்வாடி தர்ஹா, தனுஷ்கோடி இராமேஸ்வரம் திருப்புலாணி நவக்கிரகங்கள் உள்ள தேவிபட்டிணம், உதரகேசமங்கை, திருவடானை, ராமர்பாதம் இப்படி பல இடங்கள் உள்ளன.

இராமநாதபுரத்தில் இயற்கையின் தாக்கம் அதிகமாக உள்ளது இங்குள்ள மக்களின் வாழ்க்கை முறை, உணவுப்பழக்க வழக்கங்களால் ஆயுட்காலம் மற்ற மாவட்டங்களை விட வித்தியாசப்படுகிறது 2006 ஜுலை மக்கள் தொகை கணக்கின் படி இந்தியாவில் 109.55 கோடி பேர் உள்ளனர். உலகின் மொத்த மக்கள் தொகையில் இது இரண்டாவது இடமாகும். மாவட்டத்தின் பிறப்பு விகிதம் 163 சதவீதமாகும். அதே நேரத்தில் இறப்பு விகிதம் 7 சதவீதமாக உள்ளது. சிசு மரண விகிதம் 25.3, மகப்பேறு தாய்மார்களின் இறப்பு விகிதம் 1.2 சதவீகிதமாக உள்ளது மக்கள் தொகை இப்படி பல லட்சம் மக்கள் வசிக்கக்கூடிய கடலோர மாவட்டமான 800 க்கும் மேற்பட்ட கிராமத்தினருக்கும் வரப்பிரசாதமாக உள்ளது. இராமநாதபுரம் அரசு மருத்துவமனை.......

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் போதுமான டாக்டர்கள் இல்லாததால் ஒரு வாரத்தில் பல பேர் இறந்த நிலையில் பல பேர் மதுரைக்கு கொண்டு போகிறார்கள்..... இதன் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் அவலநிலை உள்ளது. இப்பகுதிகளில் பெரும்பாலும் ஆரம்ப சுகாதாரநிலையம் மட்டுமே அமைந்துள்ள நிலையில். இங்கு கிராமத்தினர் முதலுதவியை மட்டும் பெற்றுக் கொண்டு இராமநாதபுரம் மருத்துவமனையதான் அதிகம் நாடுகின்றனர். இங்கு மாவட்டத்திலே பிரம்மாண்டமாக, அதிக படுக்கை வசதி, நவின கருவி வசதிகளுடன் உள்ளது. ஆனால் இங்கோ டாக்டர்கள் பணியிடங்கள் காலியாக இருப்பது இப்பகுதி கிராமங்களுக்கு மக்களை மிகுந்த கவலையில் ஆழ்த்தியுள்ளது கடந்த சில தினங்களுக்கு முன் 11வது வார்டு இந்திரா நகரை செர்ந்த கருப்பையா மகன் கூத்தையா 19 என்ற இளவட்டம் விபத்துக்கு உள்ளானான் உடனே கூத்தையவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கூட்டி சென்றார்கள்.. மருத்துவமனையில் பணிபுரிந்த செவிலியர்கள், இங்கே மருத்துவர்கள் இல்லை உடனே மதுரைக்கு கொண்டு செல்லுங்கள் என்று சொன்னார்கள்.. கூத்தையாவின் தாய் உடனே மதுரைக்கு போகும் வழியில் மானாமதுரை என்ற இடத்திள் கூத்தையா இறந்து விட்டான் இதர்க்கு காரனம் இராமநாதபுரத்திள் பொதிய டாக்டர்கள் இல்லை இருந்திருந்தாள் கூத்தையாவை காப்பாற்றி இருக்கலாம்.. கடந்த ஒரு வாரத்தில் மூன்று பேர் இறந்துள்ளனர், இரு தினம் முன் பள்ளி மாணவி ஒருவர் பஸ்சில் விபத்திள் சிக்கி மருத்துவமனைக்கு கோண்டு செள்ளப்பட்டது. டாக்டர்கள் இல்லாததால் முதலுத்விக்கு கூட மதுரைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. அவசர உதவி, தீ விபத்து சிகிச்சை, பிரசவம் உட்பட 24 பிரிவுகளும் 24 மணிநேரமும் சுறுசுறுப்பாக செயல்பட்ட நிலையில், மருத்துவமனை தற்சமயம் வெறிச்சொடி காணப்படுகிறது. பகலிலேயே இந்த நிலை என்றால் இரவு நேரப்பணி டாக்டர்களை பற்றி சொல்ல தெவையில்லை. பிரசவம் பார்க்க டாக்டர்கள் இல்லாதது பெண்கள் மற்றும் ஏழை மக்களிடையே மிகுந்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நொயாளிகள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும்