Tuesday, January 17, 2012

தேசம் விட்டு தேசம் வந்த பறவைகள் அதன் துடிப்பு.!!!!!!!!!!!




தேசம் விட்டு தேசம் வந்த பறவைகள் நாங்கள். வெளிநாட்டிள் நிலைமை தெரிகிறது. கனவில் கற்பனை செய்தது வேறு. ஆனால் இப்பொழுது பார்ப்பது வேறு. கலர்கலரான லைய்ட்டுகளும். பேரிய பேரிய கட்டிடங்களும் சாலைகளில் கார்கள் பரப்பதும். ஆனால் என்ன புகைப்படத்தில் பார்க்கும் பொழுது மனதில் ஒரு சந்தோஷம் இருந்தது. ஆனால் இப்போ நேரில் பாத்ததும் தன் வாழ்க்கையே! கேள்விக் குறியாக இருக்கு. மனதில் பயம் தோன்றுகின்றது.



நம் தேசத்தில் சந்தித்த நன்பர்களும். சொந்தங்களும் எப்படி இருக்கிறார்கள் என தெரிகிறது. அம்மா அப்பா அக்கா தம்பி அண்ணன் மாப்புள்ளா மாமா அத்தை சின்னம்மா சித்தப்பா மச்சான் அந்த சொந்தங்களை இங்கு காணவில்லை நன்பர்களை பார்க்க பைக்கு பரந்த நன்பர்கள் எங்கே! என்னை போன்ற நன்பர்கள் இங்கு படும் கஷ்டங்கள் நினைத்துக் கூட பார்க்கமுடியவில்லை. அவர்கள் காட்டும் பாசம் ஏமாற்றம் அடைகிறது.


நாமும் முன்னேற வேண்டும் நம் குடும்ப உயர வேண்டும். பிறர் உதவி விவேகம் இல்லை. என்ற எண்ணம் மனதில் உருவாகிறது. உழைக்க வேண்டும். அதற்கு வேலை வேண்டும். எங்கே போய் யாரிடம் கேட்பது என்னவென்று கேட்பது! எதாவது வேலை கொடு என்றால். உனக்கு என்ன வேலை தெரியும். என்றால் என்ன பதில் சொல்லுவது போன்ற பல கேள்விகள் மனதில் பிறக்க. தன் தவறு தனக்கு புரிகிறது. இது வரை தன்னை தனிமைப்படுத்தி பார்க்கவில்லை. நமக்கு என்ன பிடிக்கும்? என்ன வேண்டும்? என்ன தெரியும்? இப்படி தன்னிலை அறியாமல் இருந்தது தவரு. படிக்கும் போது இருந்த அலட்சியம் இப்போ தெரிகிறது ஊர்சுற்றியபோது இருந்த இன்பமும். இனிமையும். கடைசி வரைவரும் என நினைத்தது தவறு. சினிமா அறைட்டையும்தான் வாழ்க்கையா இருந்தது.







இப்பொழுது அதைய் நினைத்தால் மனததுக்கு வேதனையும் கூட. இந்த உலகம் மனிதர்களை விட பணத்தை மதிக்கிறது. வசதிக்கு மண்டியிடுகிறது. பிறர் மதிக்க நாம் வாழ வேண்டும் என்றால் அந்த பணம் தேவை! வசதி தேவை. என புத்தி வேலை செய்ய. மனசு பலப்படுகிறது. மனசு பலப்பட. உடல் உழைக்கச் சொல்கிறது. எந்த வேலை குடுத்தாலும் நான் செய்கிறேன், எத்தனை மணிநேரம் வேண்டுமானாலும் உழைக்கிறேன். எத்தனையோ கஷ்டங்கள் பட்டு, கடன்ங்கள் பட்டு, செலவு செய்தாலும். இந்த நாட்லே எல்லா கஷ்டங்கலையூம் சரி செய்யவேண்டும் என்று சந்தோஷம் துக்கம் நஷ்டம் பாசம் எல்லாத்தையும் அடைக்காக்கும் பறவைபோல் ஆய்கின்றோம்.



பலருக்கு விசா கொடுத்த இடத்தில் வேலையில்லை. வேறு இடத்தில் செய்யவேண்டும். வேறு இடத்தில் வேலை செய்தால் இந்தநாட்டின் சட்ட விரோதமான குற்றம் அதர்க்கு பெயர்தால் ஹிந்தில கள்ளிவேள்ளினு சொல்லுவாங்க! இப்படி பட்ட சூழ்நிலையாகிறது. பலருக்கு விசா கொடுத்த இடத்தில் வேலையில்லை. வேறு இடத்தில் செய்ய வேண்டும். வேறு இடத்தில் வேலை செய்தால் இந்தநாட்டின் சட்ட விரோதமான குற்றம். இருந்தும் சூழ்நிலை நம்மை விடுவதில்லை. இந்த நாட்டின் அதிகாரிகள் கண்ணில் படாமல் என்னேரமும் எதுவும் நிகழலாம் என நினைத்து வேலை செய்ய வேண்டும். யாரை பார்த்தாலும் இவர் சிஜ்டி யா இருப்பாரோ? ஒரு கம்பெனியில் வேலை செய்வதுக்காக இந்தநாட்டின் ஒரு கார்டு குடுப்பாங்க அந்த கார்டுக்கு பெயர்தான் (பத்தாக்கா) என்று பெயர். வேலை பார்க்கும் போது வேறுயாராவது வந்தால் இவர் அதிகாரியா இருப்பரோ என்று பயத்துடன் வேலை செய்யவேண்டும்.






இப்பொழுது புதிதாக வரும் பலபோருக்கு வேலையின்மை, சம்பளம் குறவு போன்ற பிறச்சனைகள் வர இது போன்ற பிரச்சனைகளையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. அது இந்தநாட்டிக்கு வந்த பிறகே தெரிகிறது. இப்படி பல கஷ்டங்களுடன் வாழ்க்கை ஆரம்பமாகிறது. சுமார் 8 இல்லை என்றால் 10 தங்கிருக்கும் ரூம் தருவாங்க அதில் எல்லா மொழி காரர்கலும் இருப்பாங்க அவர்களுடன் நயந்து போக வேண்டும். தன் உடமை என் படுக்கையை தவிர வேறு எதுவும் வைக்க முடியாத நிலைமை. வேலை நேரம் போக மீதி நேரம் இந்த அறைதான். உன் ஒய்வு. உன் பொழுது போக்கு உழைப்பு உணவு உறக்கம் இனி இதுவே உன் உலகம். இதைத்தவிர வேறு எந்த சுகமும் இல்லை. ஒரு நாள் செய்ததே! திரும்ப திரும்ப காலம் முழுவதும் செய்ய வேண்டும். சக்கரம் போல் அமைய அதில் நீ இயந்திர மனிதனாக வேலை செய்ய வேண்டும்.






இனி உன் வீட்டில் நடக்கும் சம்பவங்களக்கும் உனக்கும் எந்த சம்மதம் இல்லை காரியங்களுக்கு பங்கேற்க முடியாது. அவசரத்துக்கு கூட உதவமுடியாத கொடுமை நான் இருக்கிறேன் நீ கவலைப்படதே! என ஆறுதல் சொல்ல முடியாத நிலமை சம்பவங்கலை நேரில் பார்க்க முடியாது போன் முலியமா தான் பேசமுடியும். எப்பவது யாராவது வந்தால் அவுங்களிடம் DVD குடுத்துவிடுவாங்க. அப்போ பார்த்து சந்தோஷம் படுவதுதான் வாழ்க்கையா இருக்கும். இப்படி வருடம் வருடமாக வயசு போக ஒருமாதம் இருண்டுமாதம் என கணக்கு போட்டு தாய் நாடுசென்று திரும்ப இந்த துயரமும் வேதனையும் நிரந்தரமாகிறது. பிரிவு காலம் பூராவும் தொடர்கிறது. இதனால் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இல்லாமல் போக வெறுமையே மிஞ்சுகிறது. மாதம் மாதம் குடும்த்துக்கு பணம் அனுப்பி வைத்தாலே கடமையாகிறது. ஆயிரம் இருந்தும் நம் குடும்பத்துடன் சேர்ந்து வாழ முடியவில்லையே என்ற ஏக்கம் மட்டும் புத்தியில் அழமாகப் பதிகிறது.





நம் தேசத்தில் உள்ள பொருளாதாத்துக்கு இத்தனை விரைவில் முன்னேறுவது சிரமமே! என்றாலும் இதுவே நீடிக்கக் கூடாது. காலங்காலமாக தொடரக் கூடாது. பிரிவே வாழ்க்கையாக கூடாது. இந்த வட்டத்தை விட்டு மாற வேண்டும். நீ செய்த தவறு உன்னைத் தின்னக் கூடாது. என்ன செய்வது என் சூழ்நிலை இப்படி ஆகிவிட்டது. என் விதி என வெந்து கொண்டு இருப்பதில் ஒரு காரியமும் நிறைவேறுவதில்லை. தைரியம் வருவதில்லை. யோசி. நல்லா யோசி. சாப்பிடும் போதும் தூங்கும் போதும். காலையில் எழும்போது. யோசி இன்னும் எத்தனை நாளைக்கு இப்படி சூழ்நிலைக் கைதியா இருக்க வேண்டும் என்று யோசி. மனசில தைரியம் வர்ர வரைக்கும் யோசி. தைரியம் என்பது உடம்பில் இல்லை மனசில இருக்கு மனசில் தைரியம் வரவேண்டும் என்றால் புத்தி தெளிய வேண்டும் என்றால் தன்னைத்தானே அறிதல் வேண்டும் அதற்க்கு தனக்குதானே யோசிக்க வேண்டும் புத்தி தெளிந்த மனசில தைரியம் வர்ர வரைக்கும் யோசிக்க வேண்டும். வேதனைகள் காரிய கஷ்டங்கள் அவமானங்கள் இடையூருகள் இவற்றைத் தாங்கும் மனோபாவம் வேண்டும் அப்பொழுதுதான் இது போன்ற சூழ்நிலைகளை உடைத்துக் கொண்டு வெற்றி கான முடியும்.


இங்கே ஒன்னு சொல்ல ஆசைப்படுகிறேன். நீ ஒரு முடிவு எடு அதுதான் உன் வருங்காலத்தை மாற்றும். இந்த நாட்டில் வேலை பார்ப்பதுக்கு பதிலா? ஊர்ல ஒரு 4 மாடு வாங்கி அதை காட்டு பகுதில் மேய விட்டால் அது நல்லா மேய்யும். அது தரும் பால் அதை விற்றால் குட நிம்மதியா இருந்துராலாம். அதான் ஊர்ல அரசாங்கமே... 2 மாடு மிக்ஸி கிரேண்டர் லாப்டப் எல்லாம் குடுக்குராங்கலாம். காலையில இந்துருச்சு கிரேண்டர்ல அரிசி ஆட்டி தோசை இட்லி இந்த மாதிரி சுட்டு முடிந்தவுடன் மிக்ஸில சட்டினி அரச்சு சாப்பிட்டு முடிந்தவுடன் 2 மாடுகளையும் பத்திகொண்டு காட்டுல விட்டுட்டு லாப்டப் எடுத்து. நல்லா நாலு பேரிடம் கடைலைய போட்டுட்டு சாயங்காலம் வீட்டுக்கு வந்து பால் பீச்சி வித்துட்டு நல்ல நிம்மதியா இருந்துராலாம்....

8 comments:

malavika said...

அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்.

jahirjj said...

மிகவும் அருமையான கருத்துக்கள்.....
இதைப்போல இன்னும் நிறைய எழுதுங்க....

வாசிம்கான் said...

அருமையான பதிவு.... வாழ்த்துக்கள்./////

படித்தமைக்கு நன்றி Medam Malavika உங்கள் ஆதரவு இருந்தால் இன்னும் பல போஸ்ட் போட இருக்கிரேன் ............

வாசிம்கான் said...

மிகவும் அருமையான கருத்துக்கள்.....
இதைப்போல இன்னும் நிறைய எழுதுங்க..../////

படித்தமைக்கு நன்றி தலைவா காத்துரிங்கள் நல்ல பதிவு தருகிரேன்......

Mubarak said...

Excellent written NANBARAE!!!

வாசிம்கான் said...

Excellent written NANBARAE!!!////

வாங்க நன்பரே! எப்படி இருக்கிங்க!! படித்தமைக்கு நன்றி இன்னும் பல பல காத்துஇருக்கிரது நன்பரே!!!!!!!!!!!!!!

லாரன்ஸ்... said...

/// இது வரை தன்னை தனிமைப்படுத்தி பார்க்கவில்லை. நமக்கு என்ன பிடிக்கும்? என்ன வேண்டும்? என்ன தெரியும்? இப்படி தன்னிலை அறியாமல் இருந்தது தவரு./////

மிக ஆழமான, மிக நேர்த்தியான ஒரு கேள்வியை எளிமையாய் கேட்டிருக்கிறீர்கள் வாசிம்...

இந்த கேள்வியை விடாதீர்கள்... பதில் கிடைக்கும் வரைக்கும் அதை பற்றி கொள்ளுங்கள்...

பதில் கிடைக்கும் போது நீங்கள் மிக்க மகிழ்ச்சியாகவும் தெளிவாகவும் இருப்பீர்கள்...

இன்றைய சோர்வும், சோகமும் மறைந்து போகும்.. அதுவரை கேளுங்கள்....

//// படிக்கும் போது இருந்த அலட்சியம் இப்போ தெரிகிறது ஊர்சுற்றியபோது இருந்த இன்பமும். இனிமையும். கடைசி வரைவரும் என நினைத்தது தவறு.////

தன்னை உணரவும், தன்னுள் கேட்கவும் இங்கு ஒரு சிலருக்கே முடிகிறது.... உங்களுக்கு அது இறைவனின் கொடை...

மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது... தொடர்ந்து எழுதுங்கள்...

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...

வாசிம்கான் said...

///மிக மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் உள்ளது... தொடர்ந்து எழுதுங்கள்...

மனப்பூர்வமான வாழ்த்துக்கள்...//

சார் என்னை எழுத சொன்னதே! நிங்கதான் சார். எனக்கு கிடைக்கிற வாழ்த்துக்கள் அனைத்தும் உங்களுக்கும் பங்கு உண்டு சார். 1999ல் இருந்து 2007 வரை என்னை சில பேர் கேட்டாங்க நீ மனுசனா ! இல்லை காட்டுவாசியா என்று கேப்பாங்க ஆனால் இப்போ நம்ம வாசிம் வரார்னு சொல்லுராங்க இப்போ! எனக்கு அறிவுறை சொன்னவர் நீங்களும் RG sirம் தான் இந்த அளவுக்கு என்னை கடந்து செயல்பட்டது நண்றி sir's !!! படித்தமைக்கு நண்றி சார் இன்னும் பல பல தொடர்ந்து எழுதுவேன் .. எழுந்துநிர்பேன் ,,,,