Monday, February 14, 2011

தேசம் விட்டு தேசம் வந்த ஒருவனின் துடிப்பு,,,,,,,,,

அம்மா உந்தன் அன்பின் முகம் காண நான் வருவது எப்போ? நமது வீட்டில் வறுமை எனும் வார்த்தை ஒளிந்தற்க்கு பின்னால் தான், உன் துயரம் என்னும் எடையை சுமர்ந்த நான்! காரணம் எனது தாயே நீ என்னை பத்து மாதம் சுமர்ந்து என்னைப் பெற்றெடுத்தாய் உனக்கு மாராக நான் என்ன செய்தேன். சின்ன உதவி நம் குடும்பம், கடலில் தத்தளித்த படகாய் இருக்கின்றது அதை மீட்கப் படாத பாடு படுகிறேன்.
ஆசையாக இருக்கு அம்மா உந்தன் அன்பு முகம் காண. ஆனால் ஆசை பாரு உந்தன் அருகில் நான். இல்லை பல காலம் உன்னை பத்திரமாய் பார்த்துக்கொள்ள ஆசை. ஆனால் அருகாமையில் நான் இல்லை அது தான். என் திசை துபாய் பகலும் இரவிலும் உன் நினைப்பு என்னை துன்புறுத்தியது தாயே! ஒரு நாளும் உன்னை மறவாமல் உன் நினைப்பு வருகிறது. என் அம்மா உன் கவலைப் போக்க கால மெல்லாம் நான் இருக்கேன் என் தாயே கலங்காதே!!!!
துபாயில் நான் தங்கத்தை வாங்க நினைத்தேன். என் தங்கத்தாயே நீ இருக்க நமக்கு எதற்கு தங்கம் என்று தண்ணீராய் செலவழித்தேன் நான் உழைத்த பணம் காசு போக போகம் புரிந்தது புன்னியவான் என் தகப்பா உன் புரியாத்தனம் தானே உன் பிள்ளை துபாயில் வாடுகிறேன் நான்..
காலம் கூடும் நேரத்தில் கழுத்தருத்தாய் என் தகப்பா காரணம் உன் நினைப்பு கழங்க விட்டாய் எங்களை நீ நீங்காத துயரம் நீ பிரிந்த சென்றதாலே. பிரிந்தது உன் பிரிவை யாரலும் தடுக்க முடியவில்லையே தங்கைகள் இருவரும் தரணியில் இருக்க தம்பி ஒருவன் ரவுடியாய் மார அக்கா ஒருத்தி அடிமைய்யாய் இருக்க என் அன்புத்தாயின் மனம் என்னவாகுமோ என்பதை நினைத்து நினைத்து என் மனம் புன்னாய் மாறியது என் அன்புத்தாயே! நீ கலங்காதே, உன் விழியில் வழியும் நீரைக்கழுவ நான் இருக்கேன். கழங்காதே! என் தெய்வமே!!
உன்னை நினைத்து நான் எழுதும் தாயே! எனது மனம் உன் நினைவிலே! உன்னை போல் ஒரு தாய் கிடைப்பது அரிது-- எனக்கு கிடைத்தென்றால் அது என் வாழ்வின் பரிசு....... பிரியமுடன் செல்வம்

1 comment:

maheswari said...

wow amma pasam nalla iruku anna neeka than feb.28 varan nu sonikalla apparam yan entha yakkam anna